டி20 போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்று இந்திய அணி சாதனை

டி20 போட்டிகளில் 100வது போட்டியை அயர்லாந்துக்கு எதிராக ஆடிய இந்திய அணி 76 ரன்கள் வித்தியசாத்தில் வென்றது. இது டி20 போட்டியில் இந்திய அணிக்கு 62வது வெற்றியாகும். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற சாதனையை பெற்றது.

முதல் டி20 போட்டி

2006ம் ஆண்டு தனது முதல் டி20 போட்டியை ஆடியது இந்திய அணி. ஒரேஒரு போட்டி அனுபவம் மட்டுமே கொண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலககோப்பைக்கு சென்றது.

2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அதன் பின் அடுத்ததுது வந்த தொடர்களையும் வென்றது.

ஆஸ்திரேலியா அணியை துவம்சம்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் இரண்டையும் வென்றது. இதில் டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்று ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்தது.

அதன்பின் விராத் கோலி தலைமையிலான இந்திய அணி 2016ம் ஆண்டு ஆசிய கோப்பையும் வென்றது. அடுத்தது வெற்றிகள் குவித்து பெருமையும் சேர்த்தது.

இதன் மூலம் தற்போது 100 போட்டிகள் ஆடிய அணிகளில் அதிக வெற்றிகள் குவித்து முதல் இடத்தில் உள்ளது. இதுவரை 62 வெற்றிகள் குவித்துள்ளது இந்திய அணி.

அதற்கு அடுத்த இடத்தில் தென்னாபிரிக்கா அணி 58 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும், 58 வெற்றிகளுடன் பாக்கிஸ்தான் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அணி 100 T20I க்குப் பிறகு வெற்றிகள்
இந்தியா 62
தென் ஆப்பிரிக்கா 59
பாக்கிஸ்தான் 58
ஆஸ்திரேலியா 53
இலங்கை 51

 

Vignesh G:

This website uses cookies.