துவக்க வீரர்களே மாஸ்… தமிழக வீரருக்கு இடம்; முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான்
நியூசிலாந்து அணியுடனான முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் முதலில் நடைபெறும் இரு அணிகள் இடையேயான டி.20 தொடரின் முதல் போட்டி நாளை (18-11-22) நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
முதல் டி.20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில்லும், இஷான் கிஷனும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்படுவார் அதே போல் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியாவுடன், வாசிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹலும், வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கும் இடம் கிடைக்கும் என தெரிகிறது.
நியூசிலாந்து அணியுடனான முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
சுப்மன் கில், இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், வாசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், அர்ஸ்தீப் சிங்.