ஸ்ரீலங்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய வீரர்கள் இவர்கள்தான்
இந்திய அணி வீரர்கள் இந்த மாத இறுதியில் இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல இருக்கின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபெற்று அப்படியே ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்றைய முன்தினம் வெளியிட்டது. மொத்தம் 24 வீரர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வீரர்கள் பட்டியல்
ரோகித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரகானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, முகமது சமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், கே எல் ராகுல்.இவர்களைத் தொடர்ந்து நான்கு ஸ்டாண்ட் பை வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன் பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் அர்சன் நகர்ஸ்வல்லா
ஜூலை மாதத்தில் ஸ்ரீலங்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இன்னொரு இந்திய அணி
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஜூலை மாதத்தில் இலங்கைக்கு இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக தற்பொழுது கூறியிருக்கிறார். அனேகமாக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் இந்திய மட்டுமே இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும் என தெரியவந்துள்ளது. ஜூலை 13-ஆம் தேதி ஆரம்பித்து ஜூலை மாத இறுதிக்குள் இந்த ஆறு போட்டிகளும் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இங்கிலாந்துக்குச் சென்ற வீரர்கள் இலங்கைக்குச் செல்லப் போவதில்லை. அப்படியே நேர்மாறாக ஒரு புதிய அணியை இலங்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது. இளம் வீரர்களைக் கொண்ட அணியாக அந்த அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. ஜூன் மாதம் இறுதியில் இந்திய அணி வீரர்கள் இலங்கைக்குச் சென்று அங்கே இரண்டு வார தனிமை காலம் முடிந்தவுடன், இலங்கை அணியுடன் இணைந்து போட்டிகள் விளையாடுவார்கள் என தெரியவந்துள்ளது. அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் உள்ள மைதானத்தில் வைத்து நடத்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு செல்ல இருக்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல்
பிரித்வி ஷா, ஷிகர் தவான், படிக்கல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, ருத்ராஜ், ஹர்திக் பாண்டியா, குருநல் பாண்டியா, ராகுல் தெவாட்டியா, விஜய்சங்கர், புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், நவ்தீப் சைனி, ஹர்ஷல் பட்டேல், கார்த்திக் தியாகி, கலீல் அஹமது, சர்க்காரியா, வருன் சக்கரவர்த்தி, சஹால், குல்தீப் யாதவ் மற்றும் ராகுல் சஹர்.
அனைத்திந்திய ரசிகர்களும் ஸ்ரீலங்காவுக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்று காண ஆவலுடன் இருக்கின்றனர். சீனியர் வீரர்கள் அவ்வளவாக இல்லாத ஒரு அணியாக கிட்டத்தட்ட முக்கால்வாசி இளம் வீரர்களைக் கொண்டு இந்திய அணி ஸ்ரீலங்கா செல்ல இருக்கிறது. இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் இந்தியாவின் வருங்கால வீரர்கள் அனைவரும் இந்த ஸ்ரீ லங்கா தொடரில் விளையாட போகிறார்கள். எனவே இப்பொழுது இந்திய ரசிகர்கள் ஸ்ரீலங்காவுக்கு எதிரான தொடரை காண ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.