உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் எந்த வீரர்கள் ஓபனிங் வரிசையில் களமிறங்க போகிறார்கள் என்றும், மூன்றாம் இடத்தில் எந்த வீரர் களமிறங்க போகிறார் என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் ரசிகர்கள் அனைவரும் தங்களது விருப்பமான கருத்தை கூறி வரும் நிலையில், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது விளக்கத்தை தற்போது கூறியிருக்கிறார்.
உலக கோப்பை இரண்டு தொடர்கள் ஓபனிங் வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா
ஆரம்பத்திலேயே சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதை மீண்டும் தற்பொழுது கூறியிருக்கிறார். நிச்சயமாக உலக கோப்பை டி20 தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இவர்கள் இருவரும்தான் ஓபனிங் வீரர்களாக களம் இறங்க போகிறார்கள் என்று மீண்டும் ஒரு முறை தற்பொழுது கூறியிருக்கிறார்.
அதற்குப் பின்னர் மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் நிச்சயமாக களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். கேஎல் ராகுல் எந்த இடத்தில் விளையாடுவார் என்று தற்போது தெரியவில்லை என்றும், ஆனால் நிச்சயமாக சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்தில் களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
முக்கிய தொடராக அமைய இருக்கும் இலங்கைக்கு எதிரான தொடர்
மேலும் இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர், பல இந்திய வீரர்களுக்கு இது முக்கியமான தொடராக அமைய இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இவர்கள் இருவரும் மீண்டும் தங்களது திறமையை இந்த தொடரில் நிரூபிப்பார்கள் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
மேலும் ஹர்திக் பாண்டியா தற்பொழுது பவுலிங் செய்து வருகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. இது இந்திய அணியின் பலத்தை நிச்சயமாக அதிகரிக்கப் போகிறது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் ஹர்திக் பாண்டியா எவ்வாறு விளையாடினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மீண்டும் அதே ஆல்ரவுண்டர் பெர்பாமன்ஸை அவர் இந்த தொடரில் காண்பிப்பார் என்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
மேலும் இந்த தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். சஞ்சு சாம்சன் மிக அற்புதமாக விளையாடும் வீரர் என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் இஷான் கிஷனுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இறுதியாக கூறி முடித்தார்
பிரித்வி ஷா மற்றும் படிக்கல் களமிறங்க வாய்ப்பு அஜய் ஜடேஜா நம்பிக்கை
இந்த உரையாடலில் அவருடன் இருந்த அஜய் ஜடேஜா இந்த இலங்கைக்கு எதிரான தொடரில் பிரித்வி ஷா மற்றும் படிக்கல் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் வருங்காலத்தில் இந்திய அணிக்கு நிச்சயமாக விளையாடுவார்கள் என்றும், அதற்கான ஒரு சிறிய துவக்கத்தை நாம் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம் என்றும் உறுதியாக கூறி முடித்தார்.