வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான ஜூனியர் அணியின் தேர்வுக்குழு அடுத்த வருடம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள அண்டர்-19 உலகக்கோப்பை அணியை இன்று தேர்வு செய்யவுள்ளது. அண்டர்-19 அணியில் ஆடும் பெரும்பாலான வீரர்கள் தற்போது தங்களது ரஞ்சி கோப்பை அணியிலும் சேலஞ்சர் அண்டர்19 கோப்பையிலும் விளையாடி வருகின்றனர்.
மும்பை அணிக்காக ஆடி வரும் நட்சத்திர வீரர் பிரித்திவ் ஷா மேலும் சேலஞ்சர் கோப்பையில் ஆடி வரும் ஹிமான்ஸு ராணா, ரகுல் சாகர், அபிசேக் சர்மா, இஷான் போரேல், சுபம் கில் ஆகிய நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளது..
இவர்களில் சுபம் கில் முன்னதாக இந்தியா ஏ அணிக்காக ஆடினார். தற்போது தனது ரஞ்சி அணிக்காக ஆட அனுப்பப்பட்டுள்ளார். எப்படியும் இந்த நட்சத்திர வீர்ரகள் அனைவரும் அண்டர்19 உலகக்கோப்பை அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.
முன்னதாக நடந்த ஜூனியர் ஆசியக்கோப்பை தொடரில் அபிசேக் சர்மா தலைமையிலான இந்திய அணி க்கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த வருட இறுதியில் நியூசிலாந்து பயணம் செய்யவுல இந்த அண்டர்19 அணி தனது முதல் போட்டியில் ஜனவரி 14ஆம் தேதி ஆஸ்திரேலியா அண்டர்19 அணியை எதிர்கொள்கிறது. அதன் பின்னர் தொடர்ந்து பாப்புவா நியூ குனியா மற்றும் ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது.