விராட் கோஹ்லியின் படை மிக ஆபத்தானது; விண்டீஸை எச்சரிக்கும் முன்னாள் வீரர்
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய படை விண்டீஸ் அணிக்கு கடும் அச்சுறுத்தலாக இருக்கும் என முன்னாள் வீரரான இயான் பிசப் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கனவு இந்திய வீரர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு தயாராகி வருகிறது.
இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்பார்த்தது போலவே கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகள் இடையேயான இந்த தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் இயான் பிஷப், விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து இயான் பிஷப் கூறியதாவது;
இந்திய அணி பேட்டிங், பீல்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக விராட் கோஹ்லியே கேப்டனாக தொடர்வது விண்டீஸ் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்படும். இந்திய அணியின் கடந்த கால செயல்பாடுகளை வைத்து பார்க்கும் பொழுது இந்த தொடரில் விண்டீஸ் அணிக்கு மிகப்பெரும் நெருக்கடி காத்துள்ளது, அதே வேளையில் விண்டீஸ் அணியையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது, அவர்களும் தங்களால் இயன்றவரை நிச்சயம் போராடுவர்” என்று தெரிவித்துள்ளார்.
டி.20 தொடருக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, க்ரூணல் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, நவ்தீப் சைனி.