முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி அபாரம்!! துவக்க வீரர் சதம்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் இன்று விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது

அணி விவரம்:

இந்தியா:
முரளி விஜய், தவான், புஜாரா, கே.எல்.ராகுல். ரஹானே, தினேஷ் கார்த்திக், பாண்ட்யா, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.

ஆப்கானிஸ்தான்:
முமகது சஷாத், ஜாவித் அகமதி, ரஹமத் ஷா, அஸ்கர் ஸ்டானிக்‌ஷாய், ஹஸ்முல்லா ஷாகிதி, அஃப்சர் ஸஸாய், முமகது நபி, ரஷித்கான், யாமிம் அகமட்ஷாய், வஃபாடர், முஜிபுர் ரஹ்மான்.

இந்திய அணியின் ஒப்பனர்கள் சிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களம் கண்டனர். ஆப்கன் அணிக்காக முதல் ஓவரை யாமின் ஹம்துஸாய் வீசினார்.

ஆப்கன் வரலாற்றின் முக்கிய நாளில் முதல் பந்தை வீச வந்த யாமின் தடுமாற்றத்தில் தனது ஒடுபாதையை இழந்தார். இதனால் முதல் முயற்சியில் முதல் பந்தை வீசவில்லை. பின்னர் இரண்டாவது முயற்சியில் அழகான ஒரு அவுட் ஸ்விங்கை வீசி அசத்தினார்.

பின்னர் தங்களது வேலையை காட்டிய சிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தத்தம் வேலையை அற்புதமாக செய்தனர்.

சிகர் தவான் ஒரு புறம் அதிரடியாக ஆட, மறுபுறம் முரளி விஜய் தன் கட்டையை வைத்து தன்னை பார்க் செய்து கொண்டார்.

அதிரடியாக ஆடிய சிகர் தவான் 87 பந்துகளில் சதம் அடித்தார். மறுபுறம் முரளி விஜய் 72 பந்துகளுக்கு 41 ரன் அடித்துள்ளார்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசித் கான் மற்றும் முஜீப் பந்துகளை சிகர் தவான் பறக்க விட்டார். இந்த இருவரும் பதட்டமில்லாமல் பந்து வீசினால் ஆப்கன் அணி அடுத்த செசனில் மீண்டு வரலாம்.

Editor:

This website uses cookies.