இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான வலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி நாளை 14ம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் மிகத் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த டெஸ்ட் ஆப்கன் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கள் ஆகும். கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடத்துவங்கிய ஆப்கன் அணி வெகு விரைவாக டெஸ்ட் அணிக்கான அந்தஸ்த்தை பெற்று முன்னேறி வருகிறது.
தற்போது, இந்த வரலாறு பேசும் டெஸ்ட் போட்டியிலும் தங்கள் திறமையை நிரூபிக்க தயாராகி வருகிறது ஆப்கன் அணி. அந்த அணியின் கேப்டன் 30 வயதான அஸ்கர் ஸ்டானிக்சை, மிகவும் நம்பிக்கையுடன் பல கருத்துக்களை கூறி வருகிறார்.
இந்திய அணியை விட தங்கள் அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது ஆப்கன் அணியின் கணிக்கப்பட்ட அணியை பார்ப்போம்.
1.அகமது சேஷாத் (வி)
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் அதிரடியாக ஆடக்கூடியவர். இந்திய அணிக்கெதிராக சில டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 70 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 90 ஸ்ட்ரைக் ரேட்டில் 2275 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 60 டி20 போட்டியில் 135 ஸ்ட்ரைக் ரேட்டில் 1830 ரன்கள் குவித்துள்ளார்.