ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை பெங்களூரிவில் தொடங்குகிறது. ஆப்கான் அணிக்கு டெஸ்ட் போட்டி அந்தஸ்தை ஐசிசி வழங்கியப் பின்பு, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி. இதனையடுத்து இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என யூகங்களின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய், ஷிகர் தவண், கே.எல்.ராகுல் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜாராவும், கோலியின் இடத்தில் ரஹானேவும், அதற்கடுத்து கருண் நாயரும், தினேஷ் கார்த்திக்கும் களமிறக்கப்படுவார்கள். அதன் பின்பு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
1.சிகர் தவான்
துவக்க ஆட்டகராராக தவான் இறங்குவார். ஐபிஎல் தொடரிலும் நல்ல பார்மில் இருப்பதை காட்டினார் இவர்.