ரோஹித் சர்மா இல்லை… கே.எல் ராகுல் கேப்டன்; ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி !!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், இந்திய அணியும் மோதுகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளுமே இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டதால், இரு அணிகளுக்குமே இது முக்கியத்துவம் இல்லாத போட்டியாகும், இதனால் இந்திய அணியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா உள்பட சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.எல் ராகுல் இந்த போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஹர்திக் பாண்டியா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், தீபக் சாஹர், அக்‌ஷர் பட்டேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆடும் லெவன்;

ஹசரத்துல்லாஹ் ஜாசி, ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ், இப்ராஹிம் ஜார்டன், நஜிபுல்லாஹ் ஜார்டன், முகமது நபி, கரிம் ஜனட், ரசீத் கான், அஜ்மத்துல்லாஹ், முஜிபுர் ரஹ்மான், ஃபரீத் அஹ்மத் மாலிக், ஃபாரூகி.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங்.

Mohamed:

This website uses cookies.