தோனியின் சாதனையை அசால்டாக சமன் செய்த ரிஷப்  பண்ட் !!

தோனியின் சாதனையை அசால்டாக சமன் செய்த ரிஷப்  பண்ட்

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 கேட்ச்கள் பிடித்ததன் மூலம் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தது.

பேட்டிங்கில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சோபிக்காத நிலையில், அதனை பந்துவீச்சாளர்கள் ஈடுசெய்தனர். இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். அதேபோல் பீல்டிங்கும் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நெருக்கடியான தருணங்களில் கேட்ச் பிடித்து பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த இன்னிங்கில் கவாஜா, ஹேண்ட்ஸ்காம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெயின், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய 6 பேரை கேட்ச் மூலம் அவுட் ஆக்கினார் ரிஷப் பந்த். இதன்மூலம் இந்திய கீப்பர்களில் ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் (6) பிடித்து முதலிடத்தில் உள்ள டோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். 2009ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டோனி ஒரு இன்னிங்சில் 6 கேட்ச் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி 15 ரன்கள் முன்னிலை;

முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய ஸ்டார்க் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஸ்டார்க் அவுட் ஆனதும், சிறிதுநேரம் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. மழை விட்டதும் நிதானமாக ஆடிய ஹெட் சதத்தை நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 72 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். அடுத்த பந்தில்  ஹேசில்வுட் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நாதன் லயன் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா இருவரும் தலா 3  விக்கெட்டுகள் எடுத்தனர். இஷாந்த் ஷர்மா, ஷமி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் இந்தியாவை விட ஆஸ்திரேலியா 15 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Mohamed:

This website uses cookies.