இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் தூக்க வீரரான பின்ச் ஜடேஜாவின் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்ற வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 0-2 என படுதோல்வியை சந்தித்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் நான்கு போட்டியின் முடிவில் 2-2 என்ற சம நிலையில் இரு அணிகளும் உள்ளன.
இந்த போட்டியில் வென்றால் தொடரை வெல்லலாம் என்ற முனைப்புடன் இரு அணி வீரர்களும் கடுமையான சவாலை சந்திக்க களமிறங்கினார்கள்.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. வழக்கம்போல துவக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் இருவரும் களம் இறங்கினார்கள்.
சிறப்பான துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடி முதல் 10 ஓவர்களில் 52 ரன்களை குவித்தது. வேகப்பந்து வீச்சு சற்று மந்தமாக இருந்ததால் சுழல் பந்து வீச்சுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அப்பொழுது பதினைந்தாவது ஓவரை வீசிய ஜடேஜா அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் நேர்த்தியாக பின்சை போல்டாக்கினார். பின்ச் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கவாஜா நிதானமாக ஆடி இந்தப் போட்டியிலும் அரைசதம் கண்டார். அவருக்கு உறுதுணையாக ஹன்ஸ்கொம் ஆடி வருகிறார். இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்பொழுது ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 111 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. களத்தில் கவாஜா 53 ரன்களுடனும், ஹன்ஸ் கொம் 22 ரங்களுடனும் களத்தில் உள்ளனர்.
வீடியோ: