ரிஷப் பண்ட்டை புகழ்ந்து தள்ளிய கிளன் மேக்ஸ்வெல்
ரிஷப் பந்த் பேட்டிங் செய்ய வந்தாலே டிவி பக்கம் திரும்பி விடுவேன். அவரின் திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறார். 20 வயதே ஆகும் ரிஷப் பந்த் இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வருகிறார். பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார்.
7-வது நபராக களம் இறங்கும் ரிஷப் பந்த், கடைநிலை வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவில் அவுட்டாகும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் ரிஷப் பந்த் அபாயகரமான பேட்ஸ்மேன். அவரது திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம் என்று மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரிஷப் பந்த் குறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் மிகவும் சிறப்பான கிரிக்கெட் திறமையை பெற்றுள்ளார். ஆடுளத்தின் மீது ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதை போன்றுதான், ரிஷப் பந்தின் திறமையில் சிறிய பகுதியை மட்டுமே நாம் பார்த்துள்ளோம்.
ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போதெல்லாம் நான் எனது டிவி-யால் இழுக்கப்பட்டு விடுவேன். அவர் களத்தில் இறங்கிவிட்டால், அவரது ஆட்டத்தை பார்க்க சூப்பராக இருக்கும்.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இருவரும் இணைந்து விளையாடிள்ளோம். அப்போது அபாரமான சில இன்னிங்ஸை எங்களுக்கு அளித்துள்ளார். மாறுபட்ட ஷாட் அடிப்பதற்கு ஏற்றபடி உடலை அவரால் எறிதாக மாற்றிக்கொள்ள முடியும்’’ என்றார்.
விடைபெறும் மெக்கல்லம்;
ஐபிஎல் வரலாற்றில் முதல் போட்டியிலேயே சதமடித்தவர் மெக்கல்லம். அவர் அடித்த 158 ரன்கள் என்பது தான் 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை 2013 ஐபிஎல்லில்தான் கெய்ல் முறியடித்தார். கெய்லுக்கு அடுத்து மெக்கல்லமின் அந்த ஸ்கோர் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட மெக்கல்லமிற்கு வயதும் அதிகமாகிவிட்டதால், அவர் முன்புபோல் அதிரடியாக ஆடுவதில்லை.
கடந்த 2016ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மெக்கல்லம், டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். 11 ஐபிஎல் சீசன்களிலும் ஆடியுள்ள மெக்கல்லம், சில நல்ல விஷயங்கள் இப்படித்தான் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளதன் மூலம் ஐபிஎல்லிலிருந்து அவர் ஒதுங்குகிறாரா என்ற ஐயத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவரது அதிரடி பேட்டிங்கிற்கு அடிமையாகப்போன ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.