ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைகிறார் ஹர்திக் பாண்டியா..?

Hardik Pandya of India during International Test Series 2nd Test 3rd day match between England and India at Lords Cricket Ground, London, England on 11 August 2018. (Photo by Action Foto Sport/NurPhoto via Getty Images)

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைகிறார் ஹர்திக் பாண்டியா..?

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ராவிற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்தவுடன் அங்கிருந்து அப்படியே நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்த அனைத்து அணிகளிலுமே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிகமாக பந்துவீசியதால் அவரது வேலைப்பளுவை குறைக்கும் விதமாக அவருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதற்கு பும்ராவின் மிரட்டலான பவுலிங்கும் முக்கியமான காரணம். 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக பும்ரா திகழ்கிறார். அதிகமாக பந்துவீசியதால், உலக கோப்பையை மனதில் வைத்து பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

பும்ராவிற்கு பதிலாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முகமது சிராஜும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சித்தார்த் கவுலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிராஜ் ரஞ்சி டிராபியில் நன்றாக பந்துவீசியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சிராஜின் பவுலிங்கில் மிரட்டல் எதுவும் இருக்காது. எனினும் அவருக்கு இதற்கு முன்பும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதை அவர் பெரிதாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஐபிஎல்லில் விராட் கோலி கேப்டனாக இருக்கும் ஆர்சிபி அணியில் சிராஜ் ஆடுகிறார். ஐபிஎல்லிலும் பல இக்கட்டான சூழல்களில் கடைசி ஓவர்களை சிராஜிடம் வழங்கியிருக்கிறார் விராட் கோலி. ஆனால் சிராஜ் போட்டியை வெற்றி பெற்று கொடுத்ததில்லை என்பது ஒருபுறமிருந்தாலும், சிராஜின் மீது கோலி அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெரிந்த விஷயமே.

அதே போல் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mohamed:

This website uses cookies.