உலகக்கோப்பையில் குல்தீப் யாதவும் இருப்பார்; ரவி சாஸ்திரி சொல்கிறார்
2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான திட்டத்தில் குல்தீப் யாதவும் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத காரணத்தால், டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது. இதற்கு பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்து தொடரை 1-1 என சமன் செய்தது. மெல்போர்னில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. கடைசி போட்டி டிராவில் முடிந்தாலும் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் தனது 71 ஆண்டு கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.
இந்நிலையில் இந்த வெற்றி மமதையில் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தாறுமாறாக பேசியது, ரசிகர்களை காண்டாக்கியுள்ளது.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ‘இந்த வெற்றி 1983 உலகக்கோப்பை, 1985 உலக சாம்பியன்ஷிப் வெற்றியை விட பெரிய வெற்றி. கிரிக்கெட்டின் உண்மையான வடிவம். மிக கடினமானது, இந்த தொடரில் ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.
குறிப்பாக புஜாரா, குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் மிகச்ச்றப்பாக செயல்பட்டனர், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்காக வகுக்கப்பட்டு வரும் திட்டத்தில் குல்தீப் யாதவும் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.