கண்டிப்பா விட்டு கொடுக்க மாட்டோம்… ஆடும் லெவனில் அவருக்கு இடம் உறுதி; தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு ஆதரவாக பேசிய ராகுல் டிராவிட் !!

கண்டிப்பா விட்டு கொடுக்க மாட்டோம்… ஆடும் லெவனில் அவருக்கு இடம் உறுதி; தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு ஆதரவாக பேசிய ராகுல் டிராவிட்

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் சூர்யகுமார் யாதவிற்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் உலகக்கோப்பை கிர்க்கெட் தொடருக்கு முன், இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, செப்டம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்திய அணியுடன் பலப்பரீட்சை செய்ய உள்ளது.

ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், திலக் வர்மா, அஸ்வின் போன்ற வீரர்களுக்கு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடர் குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், சூர்யகுமார் யாதவிற்கு ஆடும் லெவனில் நிச்சயம் இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், “சூர்யகுமார் யாதவை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடுவார் என முழுமையாக நம்புகிறோம், அவருக்கான சரியான நேரத்திற்காக சூர்யகுமார் யாதவும் காத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை பயன்படுத்தி சூர்யகுமார் யாதவ் தன்னை நிரூபித்து கொள்வார்” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி;

சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வாசிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், கே.எல் ராகுல், இஷான் கிஷன், பும்ராஹ், முகமது சிராஜ், முகமது ஷமி, பிரசீத் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்.

Mohamed:

This website uses cookies.