புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி; சச்சின் சாதனை காலி
ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவரும் கோலி, சிட்னி போட்டியிலும் அதை செய்ய தவறவில்லை.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களைக் குவித்துவருகிறார்.
ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவரும் கோலி, சிட்னி போட்டியிலும் அதை செய்ய தவறவில்லை. இந்த போட்டியில் வெறும் 23 ரன்களே அடித்து அவுட்டானார் கோலி. ஆனால் 19,000 சர்வதேச ரன்களை இந்த இன்னிங்ஸில் கடந்தார்.
இதன்மூலம் சர்வதேச போட்டிகளில்(டெஸ்ட், ஒருநாள், டி20) 19,000 ரன்களை விரைவில் கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரான சச்சினை பின்னுக்கு தள்ளி கோலி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். கோலி 399 இன்னிங்ஸ்களில் 19 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 432 இன்னிங்ஸ்களிலும் பிரயன் லாரா 433 இன்னிங்ஸ்களிலும் ரிக்கி பாண்டிங் 444 இன்னிங்ஸ்களிலும் ஜாக் காலிஸ் 458 இன்னிங்ஸ்களிலும் 19 ஆயிரம் சர்வதேச ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர். இவர்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி விரைவில் 19000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் மிக குறைந்த இன்னிங்ஸில் 19,000 ரன்களை கடந்த டாப் 5 வீரர்கள் பட்டியல்;
விராட் கோஹ்லி;
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனான விராட் கோஹ்லி 399 இன்னிங்ஸில் 19,000 ரன்கள் கடந்த இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்;
கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர், 432 இன்னிங்ஸில் 19,000 ரன்களை கடந்ததே இதுவரை சாதனையாக இருந்தது, தற்போது சச்சினின் இந்த சாதனையை தான் விராட் கோஹ்லி தற்பொழுது முறியடித்துள்ளார்.
பிரயன் லாரா;
விண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பிரையன் லாராவும் 433 இன்னிங்ஸில் 19,000 ரன்கள் கடந்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ரிக்கி பாண்டிங்;
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், 444 இன்னிங்ஸில் 19,000 ரன்களை கடந்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஜக் காலிஸ்;
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜெக் காலிஸ் 458 இன்னிங்ஸில் 19,000 ரன்கள் கடந்துள்ளார்.