ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது, டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்துள்ளார். 222 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது.
2 விக்கெட் கீப்பர்களை வைத்துக் கொள்வதற்குப் பதிலாக தோனி அல்லது தினேஷ் கார்த்திக்கிற்குப் பதிலாக ராகுலை வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ராகுல் இடம்பெறவில்லை, ‘அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தால் எப்படி?’ என்று தன் அதிருப்தியை ராகுல் வெளியிட்டும் அவர் குரல் அணி நிர்வாகத்துக்குக் கேட்கவில்லை. பும்ரா, புவனேஷ்வர் குமார், சாஹல், ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதார் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ் என்று இந்திய லெவன் உள்ளது.
பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற கேள்வி இருந்தது, அதான், தோனி அணிக்குச் சுமையாக மாறிவருவதை யார் கேள்வி எழுப்புவார்கள் என்ற நிலையில் சுனில் கவாஸ்கர் எழுப்பியுள்ளார். உலகக்கோப்பையில் ஆடி தன் ஸ்பான்சர்களையும் ரசிகர்களையும் அவர் திருப்தி செய்ய வேண்டுமெனில் பேட்டிங்கில் கவனம் செலுத்துவது நல்லது என்று அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, இந்நிலையில் இலக்கை விரட்டும்போது இன்று அவர் சோபிப்பாரா, பினிஷிங் கிங் என்ற தனது அடையாளத்தை மீட்டெடுப்பாரா என்பதும் ஆர்வமாக உள்ளது.
வங்கதேச அணி சற்றும் எதிர்பாரா வகையில் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸை தொடக்கத்தில் இறக்க அவர் 16 ரன்களுடனும் லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்து அடித்து நொறுக்க 8.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள். பும்ரா 4 ஓவர்களில் 29 என்று சாத்து வாங்கி வருகிறார். சாஹல் 2 ஓவர்களில் 19 ரன்கள் என்று சொதப்பினார்.
வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.
17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.
2-வது விக்கெட்டுக்கு லிட்டோன் தாஸ் உடன் இம்ருல் கெய்ஸ் ஜோடி சேர்ந்தார். கெய்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். வங்காள தேசம் 24 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் குவித்தது.