இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டி போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், அடுத்ததாக நடைபெற்ற டி.20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி கெத்தாக கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 23ம் தேதி துவங்க உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி 23ம் தேதியும், இரண்டாம் போட்டியும் 26ம் தேதியும், கடைசி போட்டி 28ம் தேதியும் புனேவில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டின் பெயர் இடம்பெறவில்லை. அதே போல் காயம் காரணமாக அந்த அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒட்டுமொத்த தொடரில் இருந்து விலகியதால் அவரது பெயரும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
விக்கெட் கீப்பராக ஜாஸ் பட்லரும், பேட்ஸ்மேன்கள் வரிசையில் பாரிஸ்டோ, ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் அடில் ரசீத் மற்றும் மொய்ன் அலி இடம்பெற்றுள்ளனர். அதே போல் டேவிட் மாலன், கிரிஸ் ஜோர்டன் மற்றும் ஜேக் பெல் ஆகிய மூன்று வீரர்களின் பெயர்கள் Reserve players பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி;
இயன் மோர்கன் (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், ஜானி பாரிஸ்டோ, சாம் பில்லிங்ஸ், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரான், டாம் கர்ரான், மொய்ன் அலி, அடில் ரசீத், லியம் லிவிங்ஸ்டன், மாட் பாரிக்ஷன், மார்க் வுட், ரீசி டாப்லி.