இந்தியாவுடனான கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி, மூன்றுவிதமான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் இரு போட்டிகளின் முடிவில் 1-1 என இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன. நாளை (17ம் தேதி) வெற்றிபெறும் அணியை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான அணியில், உள்ளூர் அணி கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இடம் பிடிப்பார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 27 வயதான வின்ஸ், 13 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வின்ஸ், அணியில் இடம் பெற்றதால், டேவிட் மலன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இன்று இந்திய ஏ – இங்கிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து சாம் கர்ரானும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
ஜேசன் ராய்,
இந்த தொடரில் இன்னும் பெரிதாக அடிக்காத ஜேசன் இந்த போட்டியில் அறிக்கை வாய்ப்புள்ளது.