களத்தில் இறங்கி வேலை பார்த்த சச்சினின் மகன்; பாராட்டும் கிரிக்கெட் உலகம்
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் உதவியை லண்டனின் லார்ட்ஸ் மைதான நிர்வாகம் பாராட்டியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஆல் ரவுண்டரான இவர், இலங் கையில் நடந்த தொடரில் கடந்த மாதம் பங்கேற்றார். அதில் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் டும் எடுத்தார். பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். இரண்டாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். இதையடுத்து ஒரு நாள் போட்டியில் விளையாடாத அவர், இங்கிலாந்தில் உள்ள எம்சிசி-யில் பயிற்சி பெற சென்றுவிட்டார்.
இந்நிலையில், அங்குள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டி மழை காரணமாக நேற்று அவ்வப்போது தடைபட்டது. போட்டி நடந்து கொண்டிருக்கும் போது மழை வந்தால், உடனடியாக ஆடுகளத்தை மூடும் வேலையில் மைதான உதவியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனும் இணைந்து செயல்பட்டார்.
இதையடுத்து லார்ட்ஸ் மைதான நிர்வாகம் அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளது. ட்விட்டரில், இங்குள்ள எம்.சி.சி இளம் கிரிக்கெட் வீரர்க ளுடன் பயிற்சி பெறும் அர்ஜுன், எங்கள் ஆடுகள நிர்வாகிகளுக்கும் உதவி புரிந்துள்ளார். வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளது.
அர்ஜூன், சமீபத்தில் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் டேனியல் வியாட்டுடன் டின்னர் சாப்பிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த வியாட்தான் கடந்த சில வருடங்களுக்கு முன் விராத் கோலியிடம், ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’ என்று கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.