இந்திய அணியின் முன்னாள் மற்றும் மூத்த வீரரான கம்பிர், இந்திய அணியில் 4வது இடத்திற்கு அஸ்வின் இறங்குவது பொருத்தமாக இருக்கும். மேலும், 6வது பந்துவீச்சாளராகவும் செயல்படுவார் என கூறியுள்ளார்.
இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிவரும் தொடரில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. முதல் 3 வீரர்களாக களமிறங்கும் தவான், ரோஹித் மற்றும் விராத் கோஹ்லி அணிக்கு மிகுந்த பலம் சேர்க்கின்றனர்.
ஆனால், துவக்க வீரர்கள் விக்கெட்டுகள் இழந்த தருவாயில் 4வதாக களமிறங்கும் வீரர் நிலைத்து நின்று நிதானமாக ஆடவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு அணிக்கும் இருக்கும். அதே ஒருநிலையில் தான் தற்போது இந்திய அணி தடுமாறி வருகிறது.
சில ஆண்டுகளாக இந்திய அணியின் துவக்க வீரர்கள் அசைக்க முடியாத தூண்களாக திகழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் சொதப்பினாலும், அடுத்ததாக களமிறங்கும் கோஹ்லி சதங்கள் விளாசி அணியை நல்ல ஸ்கோருக்கும், இலக்குகளை துரத்தி வெற்றி காண்பதிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.
இது அனைத்து போட்டிகளிலும் நிகழும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகள்கள் பலர் இந்தியாணியை விமர்சித்து வருகின்றனர். ஏனெனில், இந்திய அணிக்கு 4வது வீரராக யார் களமிறங்குவது என்பது இன்றளவும் கேள்விக்குறியாக இருக்கிறது.
சில காலம் அந்த இடத்தில் மனிஷ் பாண்டே ஆடினார். அவரது மோசமான ஆட்டத்தினால் சுரேஷ் ரெய்னா, முன்னாள் கேப்டன் தோனி, தற்போது கே எல் ராகுல் ஆகியோர் அவரவர் இடத்தை மாற்றி ஆடி வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பிரிடம்,” இந்திய அணியின் ஆல்ரவுண்டர்க்கான தேடுதலில் அதாவது யார் பெட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவார்” என்ற கேள்விக்கு, அடுத்த கணமே யோசிக்காமல் ரவிச்சந்திரன் அஸ்வின் என தெரிவித்தார். அவர் கூறுகையில் “அஸ்வின் மீண்டும் அணிக்கு அழைத்து வந்து நான்கவது இடத்தில் இறக்கலாம். தோனி ராகுல் இருவரும் மீண்டும் கீழ் வரிசையில் இறக்கலாம்” என தெரிவித்தார்.
மேலும் அஸ்வினை இணைப்பதால் அணியில் பந்துவீச்சுக்கு கூடுதல் பலமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு அஸ்வின், ஜடேஜா உதவிய விதத்தையும் கூறினார்.
“அஸ்வின் அணியில் இணைத்து 4வது இடத்தில் இறக்கலாம். கே எல் ராகுல் தனது அதிரடியை 5வது இடத்தில தொடர வேண்டும். கேப்டன் கோஹ்லி வழக்கம்போல 3வது இடத்தில அணிக்கு பலம் சேர்க்கலாம்.”
“நான்காவது இடம் என்பது அணிக்கு மிக முக்கியமானது. 60,70 பந்துகளில் சதம் விளாச வேண்டிய அவசியம் இல்லை. மாறாக பந்துகளுக்கு பந்து ரன்கள் எடுத்தால் போதுமானது. கீழ் வரிசையில் ஹார்திக், கே எல் ராகுல், தோனி வானவேடிக்கையை காட்டுவர்” என தெரிவித்தார்.