அணியில் இருந்து நீக்கப்படும் மிக முக்கிய வீரர்; மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !!

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி நாளை (16-03-21) நடைபெறுகிறது.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இரு அணிகளுமே மூன்றாவது போட்டியில் வெற்றி பெற போராடும் என்பதால் இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் ஒரு சில மாற்றங்கல் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த இரண்டு போட்டிகளிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றே தெரிகிறது. ஓய்வு காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத ரோஹித் சர்மா, கே.எல் ராகுலின் இடத்தில் களமிறங்குவார். ரோஹித் சர்மாவின் எண்ட்ரீ இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்றே தெரிகிறது.

மிடில் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. அதே போல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டும், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியாவிற்குமே இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே மூன்றாவது போட்டிக்கான அணியிலும் விளையாடுவார்கள் என்றே தெரிகிறது.

மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

இஷான் கிஷன், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்.

Mohamed:

This website uses cookies.