இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம் ; கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான் !!

இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை (28-03-21) நடைபெற உள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (28-03-21) நடைபெற உள்ளது.

இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரையே தீர்மானிக்கும் மிக முக்கிய போட்டியான இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது. குறிப்பாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய க்ரூணல் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு கடைசி போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. குல்தீப் யாதவின் இடத்தில் யுஸ்வேந்திர சாஹலுக்கும், க்ரூணல் பாண்டியாவின் இடத்தில் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தருக்கும் இடம் கிடைக்கலாம் என தெரிகிறது.

பேட்ஸ்மேன்கள் தங்களது வேலையை சரியாக செய்து வருவதால் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. இதனால் சூர்யகுமார் யாதவிற்கு கடைசி போட்டியிலும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை.

கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

Mohamed:

This website uses cookies.