இந்த இந்திய பந்துவீச்சாளரை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல; இங்கிலாந்து துவக்க வீரர் கூறுவது இவரைத்தான்!

இங்கிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக நிச்சயம் இந்த பந்துவீச்சாளர் இருப்பார் என எச்சரிக்கையாக பேசியிருக்கிறார் துவக்கவீரர் ரோரி பர்ன்ஸ்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் முடிவுற்றது. அடுத்ததாக, இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிகள் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

இதற்காக இங்கிலாந்து வீரர்கள் ஏற்கனவே இந்திய வந்தடைந்து விட்டனர். அவர்களுக்கான முதல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தோற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு கொரோனா டெஸ்ட்டுகள் மீதம் இருக்கின்றன. பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் இந்த மீதமிருக்கும் இரண்டு டெஸ்டுகள் முடிக்கப்பட்டு வீரர்கள் இயல்புநிலை பயிற்சிக்கு திரும்புவர்.

பயிற்சி துவங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி இந்திய வீரர்களை எதிர்கொள்வது மற்றும் பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. ஆஸ்திரேலியா தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே விலகிய வீரர்கள் தற்போது மீண்டும் குணமடைந்து அணிக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. குறிப்பாக பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.

இந்நிலையில் இந்த இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிப்பது சற்று கடினமான விஷயம் என்று தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ரோரி பர்ன்ஸ். அவர் கூறுகையில்,

“பும்ராவின் பந்துவீசும் விதம் மற்றும் பந்தை ரிலீஸ் செய்யும் போது விதம் இரண்டும் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. அவரை கணிப்பது கடினமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். அவர்கள் நல்ல பார்மில் இருந்தபோதும் இவரது பந்தில் திணறினர்.

அதேநேரம் இஷாந்த், சிராஜ் இருவரும் நல்ல பார்மில் இருப்பதால், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்க்காக தீவிர யுகத்திலும், பயிற்சியிலும் இறங்க உள்ளோம். இங்கிலாந்து அணி வீரர்கள் வெற்றியுடன் இந்தியா வந்திருப்பதால், நல்ல மனநிலையில் இருக்கிறோம்.” என பதிவு செய்தார்.

இங்கிலாந்து அணி சென்னை மைதானத்தில் இதுவரை 9 போட்டிகள் விளையாடி 3 முறை வென்றிருக்கிறது. இந்திய அணி 5 முறை வென்றிருக்கிறது. கடைசியாக 2016ல் நடந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.