நான்காவது டெஸ்ட் போட்டியில் நாங்களே வெல்வோம்; ஜாஸ் பட்லர் நம்பிக்கை
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என்று அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டியில் வெற்றியும், இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்காம்ப்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 246 ரன்னும், இந்தியா முதல் இன்னிங் சில் 273 ரன்னும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 2 விக்கெட் உள்ளது. குர்ரான் 37 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
England batsman Jos Buttler scored a crucial 69 on the third day of the fourth Test against India, helping England recover from 122/5 to finish at 260/8 at stumps.
நேற்றைய போட்டிக்கு பின் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த டெஸ்டில் எங்களால் (இங்கிலாந்து) நிச்சயமாக வெற்றி பெற முடியும். இந்த ஆடுகளத்தில் 2-வது இன்னிங்கில் ரன்கள் சேர்ப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும். மொய்ன் அலி, ஆதில் ரஷித், மற்றும் வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். இதனால் எங்களுக்கு இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.