இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் கிரிக்கெட் போட்டியின் நடுவர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட டேவிட் லாய்ட், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான அகமதாபாத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட கூடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 24ம் தேதி துவங்க உள்ளது.
இரண்டாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் பொழுது அக்சர் பட்டேல் வீசிய பந்தில் ஜோ ரூட் எல்பிடபிள்யூ என்ற முறையில் அவுட் ஆகினார்,ஆனால் இதற்கு களம் நடுவர்களாக இருந்த நிதின் மேனன் நாட் – அவுட் கொடுத்துவிட்டார், பின் இதுபற்றி மூன்றாம் நடுவர்கலிடம் கேட்கப்பட்டது,ஸ்டம்புக்கு நெருக்கமாக போன பந்தாக இருந்தாலும் அவர்கள் களம் நடுவர் என்ன தீர்ப்பு வழங்கினாலும் அது தான் என்று கூறிவிட்டனர், கள நடுவரின் அலட்சியத்தால் ஜோ ரூட் மீண்டும் தொடர்ந்தார்,இதனால் விரக்தியடைந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிதின் மேனனிடம் நீண்ட நேரம் உரையாடினார், இது கிரிக்கெட் வல்லுநர்கள் சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுபற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளருமான டேவிட் லாய்ட் கூறியதாவது,இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு விராட் கோலி தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் இதுவே கால் பந்தாக இருந்தால் அவருக்கு நிச்சயம் சிவப்பு கார்டு கொடுத்து வெளியில் அமர வைத்து இருப்பார்கள் என்றும் கடுமையாக பேசினார், மேலும் அவர் கூறியதாவது கிரிக்கெட்டிலும் இந்த மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரவேண்டும் அப்பொழுதுதான் கிரிக்கெட் போட்டியில் இந்த மாதிரியான ஒழுக்கக்கேடான செயல்கள் நடக்காமல் இருக்க அது உதவும் என்று கூறினார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் கள நடுவர் நிதி மேனனுக்கும் இது இரண்டாவது வாக்குவாதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலுக்காக ஐசிசியிடமிருந்து விராட் கோலிக்கு தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது