மிகப்பெரும் மாற்றத்துடன் முதலில் களமிறங்குகிறது இந்தியா
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அயர்லாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி.20 போட்டி டப்லின் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் மிகப்பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பராக தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் பும்ராஹ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு பதிலாக புதுமுக வீரரான சித்தார்த் கவுலும், சீனியர் வீரரான உமேஷ் யாதவும் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதே போல் ஷிகர் தவானுக்கு பதிலாக கே.எல் ராகுல் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதே போல் அயர்லாந்து அணியில் பாய்ண்டருக்கு பதிலாக போட்டர்பீல்டு அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணி;
விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சித்தார்த் கவூல், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
இந்த போட்டிக்கான அயர்லாந்து அணி;
பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷானான், வில்லியம் போட்டர்பீல்டு, ஆண்ட்ரியூ பால்பரைன், கேரி வில்சன், சிமி சிங், கெவின் ஓபிரைன், ஸ்டூவர்ட் தாம்ப்சன், ஜார்ஜ் டாக்ரெல், பாய்ட் ரான்கின், பீட்டர் சேஸ்.