டிரண்ட் பவுல்ட்டின் பேட்டிங் ஸ்டைலை பார்த்து வாய் விட்டு சிரித்த ரோஹித் சர்மா !!

டிரண்ட் பவுல்ட்டின் பேட்டிங் ஸ்டைலை பார்த்து வாய் விட்டு சிரித்த ரோஹித் சர்மா

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் பேட்டிங் ஆடும்போது, அவரது கால் நகர்த்தல்களை பார்த்து ரோஹித் சர்மா பயங்கரமாக சிரித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கத்தால் சுவாரஸ்யமே இல்லாமல் ஒரு சார்பான போட்டியாக அமைந்தது.

NAPIER, NEW ZEALAND – JANUARY 23: Mohammed Shami of India appeals during game one of the One Day International series between New Zealand and India at McLean Park on January 23, 2019 in Napier, New Zealand. (Photo by Kerry Marshall/Getty Images)

சொந்த மண்ணில் பெரும்பாலான போட்டிகளில் 300க்கும் அதிகமான ரன்களை அடித்து மெகா ஸ்கோரை குவிக்கும் நியூசிலாந்து அணி, நேற்றைய போட்டியில் இந்திய அணியிடம் எந்தவித சவாலுமின்றி சரணாகதி அடைந்தது. வெறும் 157 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த இலக்கை இந்திய அணி எளிதாக எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின் போது, டெயிலெண்டரான டிரெண்ட் போல்ட்டின் கால் நகர்த்தல்களை பார்த்து ரோஹித் சர்மா அடக்க முடியாமல் சில நிமிடங்கள் சிரித்தார். கடைசி வீரராக களமிறங்கிய போல்ட், சாஹல் வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க நினைத்தார். பின்னர் அந்த பந்தை எப்படியாவது அவுட்டாகிவிடாமல் தடுத்தால் போதும் என்ற நிலையில், தட்டுத்தடுமாறி தடுத்துவிட்டார். அப்போது அவரது கால் நகர்த்தல்கள் செம காமெடியாக இருந்தது. அதைக்கண்டு ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரோஹித் சர்மா, அடக்க முடியாமல் சிரித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி 26ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.