வெறித்தனமாக விளையாடிய விராட் கோலி… சத்தம் இல்லாமல் சம்பவம் செய்த ஸ்ரேயஸ் ஐயர்; 397 ரன்கள் குவித்தது இந்திய அணி !!

வெறித்தனமாக விளையாடிய விராட் கோலி… சத்தம் இல்லாமல் சம்பவம் செய்த ஸ்ரேயஸ் ஐயர்; 397 ரன்கள் குவித்தது இந்திய அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அதிரடியான துவக்கம் அமைத்து கொடுத்தார். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 29 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் களமிறங்கிய விராட் கோலியுடன் கூட்டணி சேர்ந்த சுப்மன் கில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பாரபட்சமே இல்லாமல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்த விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50வது சதத்தையும் பதிவு செய்து மிகப்பெரும் வரலாறு படைத்தார்.

சுப்மன் கில் ரிட்டயர் ஹர்ட் ஆனபிறகு களத்திற்கு வந்த ஸ்ரேயஸ் ஐயர், கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார்.

விராட் கோலி 113 பந்துகளில் 117 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 70 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் களமிறங்கிய கே.எல் ராகுல் 20 பந்துகளில் 39 ரன்களும், கடைசி நேரத்தில் மீண்டும் களத்திற்கு வந்த சுப்மன் கில் மொத்தம் 66 பந்துகளில் 80 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 397 ரன்கள் குவித்துள்ளது.

Mohamed:

This website uses cookies.