அதிரடி பேட்ஸ்மேனுக்கு இடம் இல்லை; பந்துவீச்சை தேர்வு செய்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா !!

அதிரடி பேட்ஸ்மேனுக்கு இடம் இல்லை; பந்துவீச்சை தேர்வு செய்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடர் இன்று துவங்குகிறது.

ராஞ்சியில் நடைபெறும் முதல் டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ப்ரித்வி ஷா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக், சிவம் மாவி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பந்துவீச்சாளர்கள் வரிசையில் இடம் கிடைத்துள்ளது.

பேட்ஸ்மேன்கள் வரிசையில் சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு முதல் டி.20 போட்டிக்கான ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது.

அதே போல் முதல் போட்டிக்கான நியூசிலாந்து அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. டாம் லதாம் மற்றும் நிக்கோலஸ் ஆகியோருக்கு பதிலாக இஷ் சோதி மற்றும் மார்க் சாப்மன் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

முதல் டி.20 போட்டிக்கான நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன்;

பின் ஆலன், டீவன் கான்வே, மார்க் சாப்மன், டேரியல் மிட்செல், கிளன் பிலிப்ஸ், மிட்செல் சாட்னர், மைக்கெ பிரேஸ்வெல், ஜேகப் டஃப்ஃபி, இஷ் சோதி, லோகி பெர்குசன், பிலையர் திக்னர்.

முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;

இஷான் கிஷன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங்.

 

Mohamed:

This website uses cookies.