இளம் வீரருக்கு இடம் இல்லை… முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !!

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (25ம் தேதி) துவங்க உள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்க உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ராஹ் போன்ற சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், முதல் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.

ரஹானே தலைமையிலான இந்திய அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் மாயன்க் அகர்வாலே களமிறங்குவார்கள் என தெரிகிறது. மிடில் ஆர்டரில் ரஹானே, புஜாரா ஆகியோரும், விராட் கோலியின் இடத்தில் ஸ்ரேயஸ் ஐயரும் களமிறங்குவார்கள் என தெரிகிறது. விக்கெட் கீப்பராக விர்திமான் சஹாவிற்கு இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே போல் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜிற்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. சீனியர் பந்துவீச்சாளர்களான உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருக்கே இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

சுப்மன் கில், மாயன்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, ஸ்ரேயஸ் ஐயர், அஜின்கியா ரஹானே, விர்திமான் சஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.

Mohamed:

This website uses cookies.