கேப்டன் விலகல்; முதலில் பந்துவீசுகிறது நியூசிலாந்து அணி
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில், மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.
நியூசிலாந்தின் வெல்லிங்டனில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் சவுத்தி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணி;
சஞ்சு சாம்சன், கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், நவ்தீப் சைனி.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணி;
மார்டின் கப்தில், காலின் முன்ரோ, டாம் ப்ரூஸ், ராஸ் டெய்லர், செராஃப்ட், டாரில் மிட்செல், மிட்செல் சாட்னர், ஸ்காட் குஜ்ஜிலின், டிம் சவுத்தி, இஷ் சோதி, ஹமிஸ் பென்னட்.