கேன் வில்லியம்சன் இல்லை… புதிய கேப்டன் நியமனம்; இந்திய டி.20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு !!

இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி நாளை (நவம்பர் 17) நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் இருந்து கேன் வில்லியம்சனிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி.20 தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டிம் சவுத்தி நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சனின் பனிச்சுமையை குறைப்பதற்காக அவருக்கு டி.20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், கேன் வில்லியம்சன் டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்றும் நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.

டிம் சவுத்தி தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிரண்ட் பவுல்ட், லோகி பெர்குசன், மார்டின் கப்தில், ஆடம் மில்னே போன்ற சீனியர் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். அதே போல் ஜெய்ல் ஜெமிசன், டாட் ஆஸ்ட்லே, மார்க் சேப்மன் போன்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான நியூசிலாந்து அணி;

டாட் ஆஸ்ட்லே, டிரண்ட் பவுல்ட், மார்க் சேப்மன், லோகி பெர்குசன், மார்டின் கப்தில், கெய்ல் ஜெமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளன் பிலிப்ஸ், மிட்செல் சாட்னர், டிம் செய்பர்ட், இஷ் சோதி, டிம் சவுத்தி.

Mohamed:

This website uses cookies.