டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களங்களில் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.
அக்டோபர் 16ம் தேதி இந்த தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் 23ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன. டி.20 உலகக்கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் மிக கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்கள் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியை ஒற்றையளாக சமாளிக்கக்கூடிய மூன்று இந்திய வீரர்கள் பற்றி.
சூரியகுமார் யாதவ்..
இந்திய அணியின் MR.360 என்று அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ் மைதானங்களில் நாலு திசைகளிலும் எளிதாக அடித்து விளையாடும் திறமை படைத்தவர்.
தற்போது தான் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் தனி ஆளாக நின்று வெற்றிபெற்று கொடுக்கும் அளவுக்கு நல்ல பார்மில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.