விராட் கோலி கூட பிரச்சனை இல்ல… ஆனா இவர் விக்கெட்ட எடுக்காம உங்களால ஜெயிக்கவே முடியாது; பாகிஸ்தான் அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !!

விராட் கோலி கூட பிரச்சனை இல்ல… ஆனா இவர் விக்கெட்ட எடுக்காம உங்களால ஜெயிக்கவே முடியாது; பாகிஸ்தான் அணியை எச்சரித்த முன்னாள் வீரர்

ரோஹித் சர்மாவின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றாவிட்டால் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியே கிடைக்க வாய்ப்பு இல்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரரான மொய்ன் கான் தெரிவித்துள்ளார்.

50 ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 45 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியையும், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியையும் எதிர்கொண்ட இந்திய அணி, இரண்டு போட்டியிலும் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 14ம் தேதி நடைபெறும் தனது அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

அஹமதாபாத்தில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதால் இந்த போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இதனால் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்துவதோடு, இரு அணி வீரர்களுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான மொய்ன் கான், ரோஹித் சர்மாவின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றுவதே  பாகிஸ்தான் அணிக்கு நல்லது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மொய்ன் கான் பேசுகையில், “ரோஹித் சர்மாவின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றுவதே பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமையும். ரோஹித் சர்மாவின் விக்கெட்டை முதல் ஓரிரு ஓவர்களில் கைப்பற்ற முடியாவிட்டால், அதன்பின் அவரது விக்கெட்டை எடுப்பது நடக்காத காரியம். ஷாகின் அப்ரிடி அல்லது வேறு யாராவது ஆரம்பத்திலேயே யார்கர் அல்லது பவுன்சர் வீசி எப்படியாவது ரோஹித் சர்மாவின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றிவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.