இந்தியா vs தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் போட்டி; வெல்லப்போவது யார்..?
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ம் தேதி, விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது.
இந்நிலையில் முதல் டெஸ்டில் இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறக்கி சோதனை செய்ய இந்திய தேர்வுக்குழுவினர், முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. இந்த சாதனையை கோலி தலைமையிலான இந்திய அணி தொடரும் என தெரிகிறது.
மோசமான பார்ம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் துவக்க வீரர் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போல இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள ரோஹித் ஷர்மாவுக்கு நல்ல வாய்ப்பு அமைத்துள்ளது.
கடைசியாக ரோஹித் ஷர்மா கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றுள்ளார். இதுவரை ரோஹித் ஷர்மா மொத்தமாக 27 டெஸ்டில் பங்கேற்று 1585 ரன்கள் அடித்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும்.