சாதிப்பாரா ரோஹித் சர்மா..? முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான்
இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று துவங்குகிறது.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த போட்டியின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா மீண்டும் இடம்பிடிப்பார் என தெரிகிறது.
அதே போல் விக்கெட் கீப்பராக தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக சீனியர் வீரரான விரக்திமான் சஹா மீண்டும் அணியில் இடம்பிடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராஹ் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் அல்லது முகமது ஷமி இடம்பிடிப்பார்.
அதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் ரவிசந்திர அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இடம்பிடிப்பார்கள் என தெரிகிறது.
இன்றைய போட்டிக்கான உத்தேச இந்திய அணி;
மாயன்க் அகர்வால், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, சட்டீஸ்வர் புஜாரா, அஜிக்னியா ரஹானே, ஹனுமா விஹாரி, விரக்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி