தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக முதலில் பந்துவீசுகிறது இந்தியா
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் வரிசையில் மணிஷ் பாண்டே, கே.எல் ராகுல் போன்ற சீனியர் வீரர்களுக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வாசிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.
இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி;
குயிண்டன் டி காக், ரீஷா ஹெண்ட்ரிக்ஸ், தெம்பா பவுமா, ரசீ வான் டர் தூசன், டேவிட் மில்லர், ஆண்டிலே பெலேகுலோயோ, டூவைன் ப்ரேட்ரியோஸ், பிர்ஜோன் போஃப்டின், காகிஷோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜ், தாப்ரைஸ் ஷம்சி.