மூன்றாவது டி.20 போட்டி; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மட்டும் கடைசி டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.
பெங்களூரின் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
அதே வேளையில் இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணியில், நார்டிஜ்ஜிற்கு பதிலாக ஹெண்ட்ரிக்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.