தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான அணியில் இளம் வீரர் ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். சமீபகாலமாக ரன்கள் எடுக்காமல் தடுமாறி வரும் கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். அணியில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், அக்டோபர் 2 அன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் வழக்கமான சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .சென்ற தொடரில் அற்புதமாக ஹனுமா விஹாரிக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது .
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் சுப்மன் கில் இந்த தொடரில் வாய்ப்பு பெற்று உள்ளார். ஆனால் இவர் ஆடும் லெவனில் இடம் பிடிப்பது கடினம் என்றே தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். உமேஷ் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த பல தொடர்களாக சொதப்பி வந்த கேஎல் ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அடுத்து அடுத்து சொதப்பியமையால், அதன் காரணமாக வேறு வழியின்றி பிசிசிஐ அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளது. இதன் காரணமாக அணியின் கட்டமைப்பில் சற்று மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது. கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக அஜின்கியா ரஹானே தொடர்கின்றனர்.