தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
அதே வேளையில் தென் ஆப்ரிக்கா அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனாக செயல்பட்ட கேசவ் மஹராஜ் உடல் நலக்குறைவால் விளையாடாததால் இந்த போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் டெம்பா பவுமா மற்றும் ஷம்சி ஆகியோரும் இந்த போட்டியில் இடம்பெறவில்லை.
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;
ஷிகர் தவான், சுப்மன் கில், இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், ஷபாஷ் அஹமத், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆவேஸ் கான்.
மூன்றாவது போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணியின் ஆடும் லெவன்;
டி காக், ஜென்னாமன் மாலன், ரீசா ஹென்ரிக்ஸ், மார்கரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ ஜென்சன், ஆண்ட்லே பெலாகுயோ, பியோன் ஃபார்டூன், லுங்கி நிகிடி, ஆன்ரிக் நோர்கியா.