இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்; முக்கிய வீரர் இடம் மாறுகிறார் !!

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்; முக்கிய வீரர் இடம் மாறுகிறார்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற இருக்கும் மூன்றாவது டி.20 போட்டியில், ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்தில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இப்போது 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடக்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. மொகாலியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. மூன்றாவது போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

2-வது போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. கேப்டன் விராத் கோலி, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயரும் அதிக ரன் குவித்தார். விக்கெட் கீப்பர் ரிஷாப், தவறான ஷாட்களை தேர்ந்தெடுத்து அவர் ஆட்டமிழப்பது, அணி நிர்வாகத்தை கவலைகொள்ள செய்திருக்கிறது.

தோனிக்கு பிறகு அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள இன்றைய போட்டியில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
கடந்த போட்டியில், ரிஷாப் நான்காவது வரிசையிலும் ஸ்ரேயாஸ் ஐந்தாவது வரிசையிலும் களமிறங்கி ஆடினர். நான்காவது வரிசையில் இறங்கி அவர் சரியாக ஆடாததால் இன்றைய போட்டியில் நான்காவது வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஐந்தா வது வரிசையில் ரிஷாப் பன்ட்டும் களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது,
போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

  1. ஷிகர் தவான்
  2. ரோகித் சர்மா
  3. விராட் கோலி (கேப்டன்)
  4. ஸ்ரேயாஸ் அய்யர்
  5. ரிஷாப் பண்ட் (கீப்பர்)
  6. ஹர்திக் பாண்ட்யா
  7. ரவீந்திர ஜடேஜா
  8. குருணல் பாண்ட்யா
  9. வாஷிங்டன் சுந்தர்
  10. நவ்தீப் சைனி
  11. தீபக் சாஹர்

Mohamed:

This website uses cookies.