இந்திய அணியின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் ; தென் ஆப்ரிக்கா முன்னாள் வீரர் சொல்கிறார்
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி, தென் ஆப்ரிக்கா அணி தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வீரர் அண்ட்ரியூ நெல் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் பறிகொடுத்துவிட்டது.
இரு அணிகல் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டி குறித்தும், இந்த தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்த தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரியூ நெல் “இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணியே வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆண்ட்ரியூ நெல் “இதே போல் கடந்த 2006ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா வந்திருந்த இந்திய அணி, இதே போல் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடவில் பங்கேற்றது. அந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துவிட்ட இந்திய அணி, கடைசி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுவிட்டது. அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்த ஸ்ரீ சாந்தை பார்த்தாலே மண்டையிலேயே அடிக்க வேண்டும் போல தோன்றியது. தற்போதும் அதே நிலைமையில் இருக்கும் இந்திய அணியை கடைசி போட்டியில் வெற்றி பெற தென் ஆப்ரிக்கா அணி விட கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் ஜோஹன்ஸ்பெர்க் மைதானத்தில் இந்திய அணி இதுவரை தோல்வியடைந்தது இல்லை என்பது வரலாறு.