தோனிக்கு இடம் இல்லை; தென் ஆப்ரிக்கா அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
தென் ஆப்ரிக்கா அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி செப்டம்பர் 15-ம் தேதி தரம்சலா, 18-ம் தேதி மொஹாலி, 22-ம் தேதி பெங்களூரு ஆகிய இடங்களில் 3 டி20 போட்டித் தொடரில் இந்திய அணியுடன் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி செப்., 4ம் தேதி தான் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்றே அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து தோனி மீண்டும் புறக்கணிப்பட்டுள்ளார், தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்விற்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர விண்டீஸ் அணியுடனான தொடரில் விளையாடாத ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார், ராகுல் சாஹர், நவ்தீப் சைனி, கலீல் அஹமது மற்றும் தீபக் சாஹர் போன்ற இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, கே.எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, க்ரூணல் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அஹமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.