யுஸ்வேந்திர சாஹல் இல்லை… தரமான வீரருக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை அணி !!

யுஸ்வேந்திர சாஹல் இல்லை… தரமான வீரருக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை அணி

இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. யுஸ்வேந்திர சாஹலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை, இதனால் குல்தீப் யாதவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. இது தவிர ஆடும் லெவனில் வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

 

அதே போல் இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. காயம் காரணமாக பதும் நிஷான்கா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் மடுசானகா நீக்கப்பட்டு லஹிரு குமாரா ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் பட்டேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், உம்ரன் மாலிக், முகமது சிராஜ்.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவன்;

குஷால் மெண்டீஸ், அவிஸ்கா பெர்னாண்டோ, சாரித் அஸ்லன்கா, டி சில்வா, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷானகா, வானிது ஹசரங்கா சமீகா கருணாரத்னே, துனித் வெல்லால்கே, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

Mohamed:

This website uses cookies.