இந்தியா-இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாள் ஆட்டம் மொத்தம் 33 ஒவர்களே வீசிய நிலையில் மழையாலும், சரியான வெளிச்சமின்மையாலும் நிருத்தப்பட்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. பேட்டிங் ஆடிய இரண்டு நாட்களும் இந்திய அணி தடுமாறித்தான் ஆடியது. போட்டி துவங்கிய முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல். பின்னர் அடுத்தடுத்து இந்திய அணியின் விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்துகொண்டு தான் இருந்தது. ஒரு புறம் பொருமையாக ஆடி 117 பந்துகளுக்கு 52 ரன் அடித்தார்.
சரியாக 50 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்து அல்லாடிய இந்திய அணிக்கு நம்பிக்கை தந்தவர் செட்டேஷ்வர் புஜரா மட்டுமே. மூன்றாவது நாளான இன்று நம்பிக்கை தூணாக இருந்த புஜரா, வந்தவுடன் ஒரு தவறான கணிப்பால் தனது ஸ்டம்புகளை லஹிரு கமாகேவிடம் பறிகொடுத்தார்.
79 ரன்னிற்கு 6 விக்கெட் எடுத்து தட்டுத் தடுமாறிய இந்திய அணிக்கு ஜடேஜா மற்றும் சஹா ஆகியோர் ஓரளவிற்கு நம்பிக்கை கொடுத்தாலும் இந்திய அணி கரை சேரும் இடத்தில் இல்லை. அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது இந்திய அணி.
பின்னர் சஹா 83 பந்துகளுக்கு 29 ரன் அடிக்க, ஜடேஜா தன் பங்கிற்கு 37 பந்துகளுக்கு 22 ரன் அடித்தார். கடைசியாக வந்த பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 13 ரன் , முகமது சமி 22 பந்துகளுக்கு 24 ரன் என் அடிக்க இந்திய் அணி 59.3 ஓவர்களில் 172 ரன்னிற்கு தனது அனைத்து விக்கெட்டுகளைம் இழந்து வெளியேறியது.
இலங்கை அணி தரப்பில் அற்புதமாக வீசிய வேகப்பந்து வீச்சாலர் சுரங்கா லக்மால் 19 ஓவர்கள் வீசி 12 அதில் 12 மெய்டன் ஓவராக்கி, வெறும் 26 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், லகிரு கமகே , தசுன் சனகா, ரங்கனா ஹெராத், தில்ருவன் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.