இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நீளமான தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடையுள்ள நிலையில் தற்போது டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நவம்பர் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, புதிய கேப்டனாக துவக்க வீரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். மேலும், இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் மற்றும் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
(Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)
தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. டி20 தொடரிலும் கேரன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், எம்எஸ் தோணி, ஜஸ்ப்பிரிட் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், லோகேஷ் ராகுல், பசில் தம்பி, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, முகமது சிராஜ், ஜயதேவ் உனத்காட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது இந்திய அணிக்கு வர தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் யோ-யோ டெஸ்டில் பெய்ல் ஆனதால், அவரால் இடம் பிடிக்க முடியவில்லை. நம்பிக்கையை தளரவிடாத வாஷிங்டன் சுந்தர் பயிற்சி எடுத்து யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றார்.
இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், அற்புதமாக செயல்பட்டார். 11 விக்கெட்டுகள் வீழ்த்திய வாஷிஙடன் சுந்தர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். துலீப் டிராபியில் சிறப்பாக செயல்பட வாஷிங்டன் சுந்தர், ரஞ்சி டிராபியில் 315 ரன் அடித்து, 12 விக்கெட்டும் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 159 ஆகும்.