ஆஸ்திரேலியா தொடரை விட இங்கிலாந்து தொடட் கடுமையாக இருக்கும் – விராட் கோலி

ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து ஆடுவதை விட இங்கிலாந்து அணிக்கெதிராக அவர்கள் மண்ணில் ஆடுவது மிகக் கடுமையான போட்டியாக இருக்கும் என கூறியள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி

இந்த தொடர் முழுவதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம். இதில் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடன் 3 டி 20, 3 ஒரு நாள், 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர்களில் மோதுகிறது.

  1. ஜூலை 3, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டி 20 ஆட்டங்களும்,
  2. 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகளும்,
  3.  ஆகஸ்ட் 1 முதல் 5 வரை முதல் டெஸ்ட்,
  4. 9 முதல் 13 வரை 2-ஆவது டெஸ்ட்,
  5. 18 முதல் 22 வரை 3-ஆவது டெஸ்ட்,
  6. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை 4-ஆவது டெஸ்ட்,
  7. செப்டம்பர் 7 முதல் 11 வரை 5-ஆவது டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

டி20 போட்டிகளில் எங்களுக்கு போதுமான அனுபவம் உள்ளது. எனவே நாங்கள் அனைவருமே இந்த தொடருக்கு தயாராக உள்ளோம். ஒரு சிறந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகச் சிறப்பானது.

நிச்சயம் இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிப்போம். இந்த தொடர் முழுவதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம். இதில் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால், கற்றுக்கொள்ள நிறை உள்ளது. அப்போது தான் ஒரு அணியாக முன்னேற முடியும். 

அதுபோல இந்த தொடரில் அனைவருக்கு வாய்ப்பு வழங்க உள்ளேன். எனவே எங்களின் நிலைப்பாட்டில் சில ஆச்சரியங்கள் இருக்கக்கூடும். இந்த தொடர் துவங்க உள்ள நிலையில், மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். இங்கிலாந்தில் விளையாடுவது என்பதே தனி சவால்தான். மேலும் அணித் தேர்விலும் சில மாற்றங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

டி20 மட்டுமல்லாது ஒருநாள் தொடர்களிலும் இந்திய அணியின் செயல்பாடு வித்தியாசமானதாகவே இருக்கும். அடுத்து இங்கு உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், இப்போதே அதற்கு தயாராக இந்த தொடரை சிறந்த களமாக பயன்படுத்த விரும்புகிறோம் என்றார்.

மேலும் , இங்கிலாந்து தொடர் கடுமையானதாக இருக்கும். ஆஸ்திரேலியா தஃடரை விட ஐ கு மிக சிறப்பாக செயலப்பட வேண்டும் எனவும் கூறினார் கோலி.

Editor:

This website uses cookies.