ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி முதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய பிறகு டிசம்பர் 17ஆம் தேதியிலிருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு விராட் கோலி மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடாமல் இந்தியா திரும்புவார். இதற்காக பிசிசிஐ அவருக்கு அனுமதி கொடுத்துள்ளது.
இந்த முக்கியமான சுற்றுப்பயணத்தில் விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று பலர் தனது கருத்தை தெரிவித்துள்ளனர். இதனால் விராட் கோலிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விராட் கோலி இல்லாத்தால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அவர் கூறுகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எந்த அளவு சிறப்பாக செயல்படுகிறது அந்த மனநிலையில்தான் டெஸ்ட் போட்டிகளிலும் செயல்படும்.
இந்திய அணிக்கு முக்கிய வீரராக எதிர்பார்க்கப்படும் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இல்லாதது அந்த அணிக்கு சற்று நெருக்கடியாக அமையும். அவர் அணியை வழிநடத்தும் விதம் அபாரமாக இருக்கிறது, இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எந்த அளவு தனது அணியை பலப்படுத்தி சிறப்பாக செயல்படுகிறாரோ அந்த அளவுக்கு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தொடரும்.
அதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டெஸ்ட் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒருவேளை இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோல்வியை தழுவும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில்(0-4) ஒயிட் வாஷ் ஆகி வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இதனால் விராட் கோலி இந்திய திரும்புவதற்குள் எந்த எந்த அளவுக்கு தனது அணியை பலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பலப்படுத்தி விட்டு செல்ல வேண்டும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்